திருக்கோத்தும்பி - சிவனோடு ஐக்கியம்
(தில்லையில் அருளியது- நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த நாவேறு செல்வியும் நாரணணும் நான் மறையும் மாவேறு சோதியும் வானவருந் தாமறியாச் சேவேறு சேவடிக்கே சென்றுதாய் கோத்தும்பீ. 215 நானார் என் உள்ளமார் ஞானங்க ளார் என்னை யாரறிவார் வானோர் பிரானென்னை ஆண்டிலனேல் மதிமயங்கி ஊனா ருடைதலையில் உண்பலிதேர் அம்பலவன் தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பீ. 216 தினைத்தனை உள்ளதோர் பூவினில் தேன்உண்ணாதே நினைத்தொறும் காண்தொறும் பேசுந்தொறும் எப்போதும் அனைத்தெலும் புள்நெக ஆனந்தத் தேன் சொரியும் குனிப்புடையானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 217 கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான் கருணைச் கண்ணப்பென் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 218 அத்தேவர் தேவர் அவர்தேவ ரென்றிங்ஙன் பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே பத்தேதும் இல்லாதென் பற்றறநான் பற்றிநின்ற மெய்த்தேவர் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 219 வைத்த நிதிபெண்டிர் மக்கள்குலங் கல்வியென்னும் பித்த உலகிற் பிறப்போ டிறப்பென்னுஞ் சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த வ...

Comments
Post a Comment