Posts

சிவபுராணம்

  (திருப்பெருந்துறையில் அருளியது தற்சிறப்புப் பாயிரம்) நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5 வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10 ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15 ஆராத இன்பம் அருளும் மலை போற்றி சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20 கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய், எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர் பொல...

கீர்த்தித் திரு அகவல்

  (தில்லையில் அருளியது - நிலைமண்டில ஆசிரியப்பா) தில்லை மூதூர் ஆடிய திருவடி பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி எண்இல் பல்குணம் எழில்பெற விளங்கி மண்ணும் விண்ணும் வானோர் உலகும் துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும் 5 என்னுடை இருளை ஏறத்துரந்தும் அடியார் உள்ளத்து அன்பு மீதூரக் குடியாக் கொண்ட கொள்கையும் சிறப்பும் மன்னும் மாமலை மகேந்திரம் அதனில் சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும் 10 கல்லா டத்துக் கலந்து இனிது அருளி நல்லா ளோடு நயப்புறவு எய்தியும் பஞ்சப் பள்ளியில் பால்மொழி தன்னொடும் எஞ்சாது ஈண்டும் இன்அருள் விளைத்தும் கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள் 15 விராவு கொங்கை நல்தடம் படிந்தும் கேவேடர் ஆகிக் கெளிறது படுத்தும் மாவேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும் மற்றவை தம்மை மகேந்திரத்து இருந்து உற்ற ஐம் முகங்களாள் பணித்து அருளியும் 20 நந்தம் பாடியில் நான் மறையோனாய் அந்தமில் ஆரியனாய் அமர்ந்து அருளியும் வேறு வேறு உருவும் வேறுவேறு இயற்கையும் நூறு நூறு ஆயிரம் இயல்பினது ஆகி ஏறு உடை ஈசன் இப்புவனியை உய்யக் 25 கூறு உடை மங்கையும் தானும் வந்தருளிக் குதிரையைக் கொண்டு குடநாடு அதன்மிகைக் சதுர்படத் சாத்தாய்த் தான் எழுந்தருளியும்...

திருவண்டப் பகுதி

  ( தில்லையில் அருளயது - இணைக் குறள் ஆசிரியப்பா) அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பு அரும் தன்மை வளப் பெருங் காட்சி ஒன்றனுக்கு ஒன்று நின்றெழில் பகரின் நூற்று ஒரு கோடியின் மேல்பட விரிந்தன இல்நுழை கதிரின் துன் அணுப் புரையச் 5 சிறிய ஆகப் பெரியோன் தெரியின் வேதியன் தொகையொடு மாலவன் மிகுதியும் தோற்றமும் சிறப்பும் ஈற்றொடு புணரிய மாப்பேர் ஊழியும் நீக்கமும் நிலையும் சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்து 10 எறியது வளியின் கொட்கப் பெயர்க்கும் குழகன் முழுவதும் படைப்போன் படைக்கும் பழையோன் படைத்தவை காப்போன் காக்கும் கடவுள், காப்பவை காப்போன், கரப்பவை கருதாக் 15 கருத்துடைக் கடவுள், திருத்தகும் அறுவகைச் சமயத்து அறுவகை யோர்க்கும் வீடுபேறாய் நின்ற விண்ணோர் பகுதி கீடம் புரையும் கிழவோன், நாள் தொறும் அருக்கனின் சோதி அமைத்தோன், திருத்தகு 20 மதியில் தண்மை வைத் தோன், திண்திறல் தீயில் வெம்மை செய்தோன், பொய்தீர் வானில் கலப்பு வைத்தோன், மேதகு காலின் ஊக்கம் கண்டோ ன், நிழல் திகழ் நீரில் இன்சுவை நிகழ்ந்தோன், வெளிப்பட 25 மண்ணில் திண்மை வைத்தோன், என்று என்று எனைப் பல கோடி எனைப் பல பிறவும் அனைத்து அனைத்து அவ்வயின் ...

போற்றித் திருஅகவல்

  (தில்லையில் அருளியது - நிலைமண்டில ஆசிரியப்பா) நான்முகன் முதலா வானவர் தொழுது எழ ஈர் அடியாலே மூவுலகு அளந்து நால் திசை முனிவரும் ஐம்புலன் மலரப் போற்றி செய் கதிர்முடித் திருநெடுமால் அன்று அடிமுடி அறியும் ஆதரவு அதனில் கடும் முரண் ஏனம் ஆகிமுன் கலந்து ஏழ்தலம் உருவ இடந்து பின் எய்த்து ஊழி முதல்வ சயசய என்று வழுத்தியும் காணா மலர்அடி இணைகள் வழுத்துதற்கு எளிதாய் வார் கடல் உலகினில் 10 யானை முதலா எறும்பு ஈறாய ஊனம் இல் யோனியின் உள்வினை பிழைத்தும் மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும் ஒரு மதித் தான்றியின் இருமையில் பிழைத்தும் இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும் மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும் ஈர் இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும் அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும் ஆறு திங்களில் ஊறு அலர் பிழைத்தும 20 ஏழு திங்களில் தாழ் புவி பிழைத்தும் எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும் ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும் தக்க தசமதி தாயொடு தான்படும் துக்க சாகரம் துயர் இடைப்பிழைத்தும் ஆண்டுகள் தோறும் அடைந்த அக்காலை ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும் காலை மலமொடு க...

திருச்சதகம்

திருப்பெருந்துறையில் அருளியது) 1. மெய் உணர்தல் (கட்டளைக் கலித்துறை) மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து உன் விரை ஆர் சுழற்கு என் கைதான் தலை வைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம் பொய்தான் தவிர்ந்து உன்னைப் போற்றி சய சய போற்றி என்னும் கைதான் நெகிழ விடேன் உடையாய் என்னைக் கண்டு கொள்ளே. 5 கொள்ளேன் புரந்தரன் மால் அயன் வாழ்வு குடிகெடினும் நள்ளேன் நினது அடியாரொடு அல்லால் நரகம் புகினும் எள்ளேன் திருஅருளாலே இருக்கப் பெறின் இறைவா உள்ளேன் பிற தெய்வம் உன்னை அல்லாது எங்கள் உத்தமனே. 6 உத்தமன் அத்தன் உடையான் அடியே நினைந்து உருகி மத்த மனத்தொடு மால் இவன் என்ன மனம் நினைவில் ஒத்தன ஒத்தன சொல்லிட ஊரூர் திரிந்து எவரும் தம் தம் மனத்தன பேச எஞ்ஞான்று கொல் சாவதுவே. 7 சாவ முன் நாள் தக்கன் வேள்வித் தகர் தின்று நஞ்சம் அஞ்சி ஆவ எந்தாய் என்று அவிதா இடும் நம்மவர் அவரே மூவர் என்றே எம்பிரானொடும் எண்ணி விண் ஆண்டு மண்மேல் தேவர் என்றே இறுமாந்து என்ன பாவம் திரதவரே. 8 தவமே புரிந்திலன் தண்மலர் இட்டுமுட்டாது இறைஞ்சேன் அவமே பிறந்த அருவினையேன் உனக்கு அன்பர் உள்ளாம் சிவமே பெறும் திரு எய்திற்றிலேன் நின் திருவடிக்கு ஆம் பவமே அருள...

நீத்தல் விண்ணப்பம்

  (திருஉத்தரகோசமங்கையில் அருளியது- கட்டளைக் கலித்துறை) கடையவ னேனக் கருணையி னாற் கலந் தாண்டுகொண்ட விடையவ னேவிட் டிடுதிகண்டாய்விறல் வேங்கையின் தோல் உடையவ னே மன்னும் உத்தரகோசமங்கைக்கரசே சடையவ னேதளர்ந் தேன்எம் பிரான்என்னைத் தாங்கிக்கொள்ளே. 105 கொள்ளார் பிளவக லாத்தடங் கொங்கையர் கொவ்வைச்செவ்வாய் விள்ளேன் எனினும் விடுதிகண்டாய் விழுத்தொழுப்பின் உள்ளேன் புறமல்லேன் உத்தர கோசமங் கைக்கரசே கள்ளேன் ஒழியவும் கண்டுகொண்டாண்டதெக் காரணமே. 106 காருறு கண்ணியர் ஐம்புலன் ஆற்றங் கரைமரமாய் வேருறு வேனை விடுதிகண்டாய் விளங்குந்திருவார் ஊருறை வாய்மன்னும் உத்தரகோசமங்கைக் கரசே வாருறு பூண்முலை யாள்பங்க என்னை வளர்ப்பவனே. 107 வளர்கின்ற நின்கருணைக்கையில் வாங்கவும் நீங்கியிப்பால் மிளிர்கின்ற என்னை விடுதிகண்டாய் வெண்மதிக்கொழுந்தொன்று ஒளிர்கின்ற நீள்முடி உத்தரகோசமங்கைக்கரசே தெளிகின்ற பொன்னுமின் னும் அன்னதோற்றச் செழுஞ்சுடரே. 108 செழிகின்ற தீப்புகு விட்டிலின் சில் மொழியாரில் பல்நாள் விழுகின்ற என்னை விடுதி கண்டாய் வெறி வாய் அறுகால் உழுகின்ற பூமுடி உத்தரகோசமங்கைக்கு அரசே வழிநின்று நின் அருள் ஆர் அமுது ஊட்ட மறுத்தனனே. 109 ம...

திருக்கோத்தும்பி - சிவனோடு ஐக்கியம்

  (தில்லையில் அருளியது- நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த நாவேறு செல்வியும் நாரணணும் நான் மறையும் மாவேறு சோதியும் வானவருந் தாமறியாச் சேவேறு சேவடிக்கே சென்றுதாய் கோத்தும்பீ. 215 நானார் என் உள்ளமார் ஞானங்க ளார் என்னை யாரறிவார் வானோர் பிரானென்னை ஆண்டிலனேல் மதிமயங்கி ஊனா ருடைதலையில் உண்பலிதேர் அம்பலவன் தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பீ. 216 தினைத்தனை உள்ளதோர் பூவினில் தேன்உண்ணாதே நினைத்தொறும் காண்தொறும் பேசுந்தொறும் எப்போதும் அனைத்தெலும் புள்நெக ஆனந்தத் தேன் சொரியும் குனிப்புடையானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 217 கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான் கருணைச் கண்ணப்பென் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 218 அத்தேவர் தேவர் அவர்தேவ ரென்றிங்ஙன் பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே பத்தேதும் இல்லாதென் பற்றறநான் பற்றிநின்ற மெய்த்தேவர் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 219 வைத்த நிதிபெண்டிர் மக்கள்குலங் கல்வியென்னும் பித்த உலகிற் பிறப்போ டிறப்பென்னுஞ் சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த வ...